உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காளஹஸ்தி பிரம்மோற்சவம் பாதுகாப்பிற்கு கண்காணிப்பு கேமராக்கள்!

காளஹஸ்தி பிரம்மோற்சவம் பாதுகாப்பிற்கு கண்காணிப்பு கேமராக்கள்!

திருப்பதி:ஸ்ரீகாளஹஸ்தியில் நடக்க உள்ள பிரம்மோற்சவ பாதுகாப்பிற்கு, கூடுதல் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட உள்ளதாக, கோவில் செயல் அதிகாரி ராமி ரெட்டி தெரிவித்தார்.அவர் கூறியதாவது.

ஸ்ரீகாளஹஸ்தியில், மகா சிவராத்திரியை ஒட்டி, 13 நாட்கள் வருடாந்திர பிரம்மோற்சவம் நடைபெற உள்ளது. வரும், 13ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கும் பிரம்மோற்சவம், 24ம் தேதி இரவு, ஏகாந்த சேவையுடன் நிறைவடைகிறது. பிரம்மோற்சவத்திற்காக, 1.5 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. ஐந்து லட்சம் பக்தர்கள் பிரம்மோற்சவத்தை காண வருவர். ராகு - கேது பூஜை வரும், 19ம் தேதி ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், பாதுகாப்பிற்காக கோவில் முழுவதும், 23 கண்காணிப்பு கேமராக்கள் கூடுதலாக பொருத்தப்பட்டுள்ளன. இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !