உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிங்கம்புணரி கும்பாபிஷேக விழா!

சிங்கம்புணரி கும்பாபிஷேக விழா!

சிங்கம்புணரி : சிங்கம்புணரி, கட்டுக்குடிப்பட்டியில் செல்வவிநாயகர், மகாமாரியம்மன், முருகன் கோயில்,பரிவார தெய்வங்களுக்கு நேற்று கும்பாபிஷேகம் நடந்தது.அனுக்ஞை,விக்னேஷ்வர பூஜை, பூரணாகுதி,தீபாராதனை,யாகசாலை பூஜை ராஜப்பா, ராமநாதன் சிவாச்சாரியார் தலைமையில் நடந்தது.காலை 9.20 மணிக்கு யாகசாலையிலிருந்து கடம் புறப்பட்டது.9.50 க்கு கும்பத்தில் நன்னீராட்டு நடந்தது.

தொடர்ந்து மஹா அபிஷேகம், பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.சீனிவாசன், சுவாமிநாதன் கும்பாபிஷேக வர்ணனை செய்தனர். வேளாண் துறை இயக்குனர் ராஜேந்திரன்,பொறியாளர் செந்தில்குமார், ஊராட்சி தலைவர் தவசீலன்,காரணகர்த்தாக்கள் முத்துராமலிங்கம், அழகு,பழனிச்சாமி, ராமசாமி, அம்மனாடி, சுகானந்தம், சின்னையா, வள்ளியப்பன்,வெள்ளக்கண்ணு,சிவலிங்கம்,தனகோபால் பங்கேற்றனர்.நாடகம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !