அய்யப்பன் கோவில் கும்பாபிஷேகம்!
ADDED :4007 days ago
திண்டிவனம்: கருவம்பாக்கம் கிராமத்தில் அய்யப்ப சுவாமி கோவில் மற்றும் பரிவார சன்னதிகளுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. இதையொட்டி 8 ம் தேதி மாலை யாக சாலை பூஜைகள் துவங்கியது. நேற்று காலை இரண்டாம் கால யாகசாலை பூஜைகள் பூர்ணாஹுதி முடிந்து யாகசாலையில் இருந்து புனித கலசங்கள் புறப்பாடு நடந்தது. மூலவர் அய்யப்ப சுவாமி விமான கலசம், மகா கணபதி, மஞ்சமாதா, ஆஞ்சயே ஸ்வாமி, கருப்பண்ண சுவாமி பரிவார மூர்த்திகளுக்கும் கும்பாபிஷேக விழா நடந்தது. விழா குழுவினர் மற்றும் கிராம மக்கள் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர்.