சேந்தமங்லகம் தெஷிணா காளிக்கோவில் கும்பாபிஷேகம்!
திருவாரூர் :திருவாரூர் அரகே சேந்தமங்லகத்தில் வாரலாற்று சிறப்பு மிக்க அருள்மிகு ஸ்ரீ தெஷிணா காளிக்கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. சுற்றுப்பகுதியைச் சேர்ந் த ஆயிரக்கணக்கானவர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
திருவாரூர் தியாகராஜர் கோவிலில் இருந்து மூன்று கி.மீ., தொலைவில் மயி லாடுதுறை சாலையில் உள்ள சேந்த மங்கலத்தில் அகில, உலகையும் படைத்து, காத்து அருள் பாலிக்கும் அன்னை பராசக்தி அடியார்களுக்கு அருள் பாலித்து, கருணை வடிவாக கொண்டு, ஸ்ரீதெஷிணா காளி அம்மன் எனும் திருநாமத் துடன் கோவில் கொண்டு, பத்து ரூபங்கள் உடையவராக அருள் பாலித்து வரு கிறார். புதியாக கோவில் கட்டி அதற்கான கும்பாபிஷேகம் நேற்று நடந்தது.
கடந்த 6 ம் தேதி காலை 7.00 மணிக்கு அனுக்கை விக்கேனஸ்வர பூஜை யஜமா னர்கள் சங்கல்ப்பம், தனபூஜை திரவியாஹீதி, பூர்ணஹூதி தீபாரதனை மற்றும் பிரவேச பலியும் காலை 10.00 மணிக்கு வாஸ்த்து சாந்தி உள்ளிட்ட பூஜைகளு டன், தினசரி பல்வேறு சிறப்பு பூஜைகள் நடந்து வந்தது.
நேற்று காலை யாக சாலை உள்ளிட்ட பல்வேறு பூஜைகளுடன், கடம்புறப் பாடும், அதன் பின் கலசத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. வி ழா ஏற்பாடுகளை பரம்பரரை நிர்வாக அறங்காவலர் சரோஜா உள்ளிட்ட வி ழா குழுவினர்கள் செய்திருந்தனர்.