நாளை கும்பாபிஷேகம்!
ADDED :4007 days ago
தேவதானப்பட்டி : குள்ளப்புரம் அன்னபூரணி அம்பாள், நீலகண்டேஸ்வரர் கோயில் மகா கும்பாபிஷேகம் நாளை நடக்கிறது.
பெரியகுளம் தாலுகா, குள்ளப்புரம் வராகநதிக்கரையில் அன்னபூரணி அம்பாள் சமேத திருநீலகண்டேஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. அகத்தியர் பூஜை செய்து சோழ மன்னர்களால் வழிபாடு செய்யப்பட்ட புகழ் பெற்றதலமாகும் இது. இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இக்கோயில் நாளை காலை 5.30 க்கு மேல் 6.30 மணிக்குள் ஜீரணோத்தாரண அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் நடக்கிறது, குள்ளப்புரம் கிராம பொதுமக்கள் மற்றும் இடைக்கால்மடம் தென்திவாரூர் ஆதிவித்யா அஷ்டகாயன் டிரஸ்ட் சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.