உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பெ.நா.பாளையம் கோவிலில் கும்பாபிஷேக விழா!

பெ.நா.பாளையம் கோவிலில் கும்பாபிஷேக விழா!

பெ.நா.பாளையம் : நரசிம்மநாயக்கன்பாளையம் ஜோதிகாலனி சக்திஜோதி விநாயகர் கோவிலில் கும்பாபிஷேக விழா நடந்தது.

விழாவையொட்டி, திருவிளக்கு ஏற்றுதல், புனிதநீர் வழிபாடு, காப்பு அணிவித்தல், திருக்குடங்கள் நிறுவுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன. தொடர்ந்து, விமான கலசம் நிறுவுதல், தெய்வத் திருமேனிகளை பீடத்தில் நிறுவுதல், எண்வகை மருந்து சாற்றுதல் நடந்தன.விழாவையொட்டி, நாடி சந்தானம் நிகழ்ச்சியும், தொடர்ந்து, சக்திஜோதி விநாயகர், ஜலகண் மாரியம்மன் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு கும்பாபிஷேக விழா நடந்தது. தொடர்ந்து, மகா அபிஷேகம், அலங்கார பூஜை நடந்தது.

விழாவுக்கு, ஜோதிகாலனி சின்னசாமி தலைமை வகித்தார். ராஜூ அடிகளார் முன்னிலை வகித்தார். ஏற்பாடுகளை திருப்பணிக்குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !