திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவிலில் பலத்த பாதுகாப்பு!
ADDED :3977 days ago
திருவனந்தபுரம் :கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் அமைந்துள்ள பத்மநாபசாமி கோவிலில் பலத்த பாதுகாப்புஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கோவில் உள்ள ரகசிய அறைகளில் பல லட்சம் கோடி மதிப்பிலான நகைகள் இருப்பது கண்டறியப்பட்டது. இதனை பாதுகாக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு பிறப்பித்தது. இதனையடுத்து கமாண்டோ படையினர் பாதுகாப்பு பணியை மேற்கொண்டனர். இந்நிலையில் சுமார் 53 கோடி செலவில் கோவிலை சுற்றிலும் கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிப்பு அறைகள் , தொலை தொடர்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனை மாநில முதல்வர் உம்மன் சாணடி முறைப்படி துவக்கி வைத்தார்.