யோக ஞான சுவாமிகள் கோவில் மகா கும்பாபிஷேகம்!
ADDED :3973 days ago
ஸ்ரீமுஷ்ணம்: ஸ்ரீமுஷ்ணம் - விருத்தாசலம் சாலையில் உள்ள பரப்பிரம்ம யோக ஞான சுவாமிகள் கோவில் மகா கும்பாபிஷேகம் நடந்தது. விழாவையொட்டி, 9ம் தேதி அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம் நடந்தது. 10ம் தேதி வாஸ்து சாந்தி, பிரவேச பலி முதல் கால யாக பூஜை, பூர்ணாகுதி நடந்தது. நேற்று காலை கோ பூஜை, இரண்டாம் கால யாக பூஜை நடந்து காலை 10:15 மணிக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை சென்னை பரப்பிரம்ம யோக ஞான சுவாமிகள் திருச்சபையினர், சித்தி விநாயகர் நற்பணி மன்ற தலைவர் வெங்கடேசன், செல்வம் உட்பட பலர் செய்திருந்தனர்.