மறையூர் அழகிய மீனாள் கோயில் கும்பாபிஷேகம்!
ADDED :3973 days ago
நரிக்குடி : நரிக்குடி அருகே மறையூரில் ஸ்ரீ அழகிய மீனாள் திருக்கோயிலில் கும்பாபிஷேகம் நடந்தது. இக்கோயில் 20 ஆண்டுகளுக்கு பின்னர் புதுப்பிக்கப்பட்ட நிலையில் மூன்று நாட்களாக சிறப்பு பூஜை, வழிபாடு நடந்தது. முதல் நாளில் முதல் கால யாக பூஜை, இரண்டாம் கால யாக பூஜை என யாக பூஜைகள் நடந்தன. கும்பாபிஷேகத்தன்று கோவை காமாட்சிபுரி ஆதினம் கலசத்தில் புனித நீர் ஊற்றினார். விக்கேனஸ்வர பூஜை, கணபதி ஹோமம், நவக்கிரஹ ஹோமம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மன் அருள் பெற்றனர். அன்னதானம் வழங்கப்பட்டது. மாவட்ட கூட்டுறவு இணைப் பதிவாளர் குருமூர்த்தி கலந்து கொண்டார்.