கிழக்கு கடற்கரை சாலையில் ஷீரடி சாய்பாபா சிலை பிரதிஷ்டை
திருத்துறைப்பூண்டி : திருத்துறைப்பூண்டி, கிழக்கு கடற்கரை சாலையில், ஷீரடி சாய்பாபா கோவில் கட்டுவதற்கான இடத்தில், ஷீரடி சாய்பாபா சிலை பிரதிஷ்டை நடைபெற்றது. திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி நாகப்பட்டினம் சாலையில் உள்ள சுந்தரபுரியில், ஸ்ரீராம் உலகரட்சகர் ஷீரடி சாய்பாபா அறக்கட்டளை சார்பில், கோவில் கட்டுவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. திருத்துறைப்பூண்டி, திருவாரூர் சாலையில் உள்ள ராமர் மடத்தில் இருந்து, பளிங்கிலான ஷீரடி சாய்பாபா சிலை ஊர்வலமாக, திருத்துறைப்பூண்டி ராமர் கோவில் வடக்கு வீதி, கீழ வீதி, தெற்கு வீதி, மேல வீதி வழியாக நாகப்பட்டினம் சாலையில் உள்ள சுந்தரபுரியை வந்தடைந்தது. அங்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று, சிலை பிரதிஷ்டை நடைபெற்றது. அறக்கட்டளை நிறுவனர் கருணாநிதி, ஆடிட்டர் ராகவன், உறுப்பினர்கள் ராஜேந்திரன், சீனிவாசன், ராம்பிரசாத், மாலதி, மங்கையற்கரசி ஆகியோர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் செங்கமலத்தாயார் கல்லூரி நிர்வாகி திவாகர், பொறியாளர் சோமசுந்தரம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.