குறிப்பறிந்து செயல்பட!
ஐயும் கிலியும் எனத் தொண்டர்
போற்றநின்ற அரியபச்சை
மெய்யும் கருணை வழிந்தோடுகின்ற
விழியும் மலர்க்
கையும் பிரம்பும் கபாலமும் சூலமும் கண்ணெதிரே
வையம் துதிக்க வருவாள் வாராஹி
குலதெய்வமே
எல்லாவற்றையும் விளக்கமாகச் சொன்னால், அதைப் புரிந்து கொண்டு செயல்படுவது ஒரு வகை. ஆனால், நிகழ்வுகளைப் பார்த்தே புரிந்து கொண்டு - சொல்லாமலேயே குறிப்பறிந்து செயல்படுவது அதைவிட மேம்பட்டது. அவர்களைத்தாம் புத்திசாதுர்யம் மிக்கவர்கள் என்று குறிப்பிடுவார்கள். அப்படி குறிப்பறிந்து செயல்படும் ஆற்றலை வழங்குபவள் ஸ்ரீவாராஹி. அதனாலேயே சந்கேதா என்றும் சமய சங்கேதா என்றும் போற்றப்படுவள். இந்த வாராஹியை போர்த் தெய்வம் என்றே குறிப்பிடுவார்கள் வாராஹிமாலை இவளுக்குரிய சிறப்பான துதிநூல். பஞ்சமி மற்றும் அஷ்டமி தினங்கள் இவளை வழிபட சிறப்பானவை. முன்னிரவு நேரத்தில் தீபமேற்றி இந்தத் துதியைச் சொல்லி வந்தால் குறிப்பறிந்து செயல்படும் ஆற்றல் ஏற்படும் பகை மறையும்.