கருத்து வேற்றுமை நீங்க!
ADDED :3933 days ago
வருந்தா வகை என் மனத்தா
மரையினில் வந்துபுகுந்து
இருந்தாள் பழைய இருப்பிட
மாக இனி எனக்குப்
பொருந்தா தொருபொருள்
இல்லைவிண் மேவும் புலவருக்கு
விருந்தாக வேலை மருந்தா
னதைநல்கும் மெல்லியலே
திருப்பாற்கடலிலே தோன்றிய அமிர்தத்தைத் திருமால் தேவர்களுக்கு வழங்கிடக் காரணமாக இருந்த அபிராமவல்லி, யான் பிறந்தும் இறந்தும் வருந்தாமல் என் இதயத் தாமரையில் எழுந்தருளித் தமது பிறப்பிடமாக எண்ணி உறைவிடமாக உறைந்தருளினாள். எனவே, இனி உலகில் எனக்கு வந்தமையாத செல்வம் ஏதுமுண்டோ? தம்பதிகளுக்குள் ஏற்படும் கருத்து வேற்றுமை நீங்கவும், நல்ல புரிதலுடன் கூடிய மனமொத்த இல்லற வாழ்வு அமையவும் தினமும் ஆறு முறை இந்தத் துதியை காலை மாலை இரு வேளையும் சொல்லி வருவது நல்ல பயனைத்தரும்.