உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மசிரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா!

மசிரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா!

அவிநாசி : தேவராயன்பாளையத்தில் பாலமுருகன், மசிரியம்மன் கோவில் மற்றும் அரசப்பம்பாளையம் வேட்டைக்கார சுவாமி கோவில் கும்பாபிஷேகம் விமரிசையாக நடைபெற்றது.

தேவராயன்பாளையத்தில் பாலவிநாயகர், பாலமுருகன், மசிரியம்மன் கோவில்கள் புனரமைக்கப்பட்டு, கும்பாபிஷேக விழா, கடந்த 8ல் துவங்கியது. கடந்த 9ல் காலை 9:45க்கு, கும்பாபிஷேகம் நடைபெற்றது. விழாவை ஒட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. தேவராயன்பாளையம், ராக்கியாபாளையம் மற்றும் சுற்றுப்பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் பங்கேற்றனர்.

கருவலூர் அருகே அரசப்பம்பாளையத்தில் புதுப்பிக்கப்பட்டுள்ள, வேட்டைக்கார சுவாமி கோவிலிலும் கும்பாபிஷேகம் நடைபெற்றது; பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !