உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சுவாமி தூக்குபவர்களை சீர்பாதம் தாங்கிகளாக அறிவிக்கக்கோரி மனு!

சுவாமி தூக்குபவர்களை சீர்பாதம் தாங்கிகளாக அறிவிக்கக்கோரி மனு!

விழுப்புரம்: கோவில் விழாவில் சுவாமி தூக்கும் பணி செய் பவர்களை சீர்பாதம் தாங்கிகளாக அறிவிக்கக்கோரி இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்தில் மனு கொடுக்கப்பட்டது. ஆதிதிருவரங்கத்தை சேர்ந்த குப்புசாமி உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்டோர் அளித்த மனு:

ஆதிதிருவரங்கம் ரங்கநாதப்பெருமாள் கோவில் சுவாமி வீதியுலா, கோவில் உள்பிரகாரம் வரும் போதும் சுவாமி தூக்கும் பணியை செங்குந்தர் முதலியார் இனத்தை சேர்ந்த நாங்கள் செய்து வருகிறோம். ஆன்மீகத்தில் உண்மையாக இருந்து செயல்படும் எங்களை அரசு சீர்பாதம் தாங்கிகளாக அரசு விதிமுறைப்படி நியமனம் செய்ய வேண்டும். மற்ற பணிகளில் மற்ற சமூகத்தை சேர்ந்தவர்கள் பணியாற்றுகின்றனர்.

கடந்த வைகுண்ட ஏகாதசி விழாவில் கிராமத்தை சேர்ந்த சிலர் தகராறு செய்தனர். இது குறித்து சங்கராபுரம் தாசில்தார் அலுவலகத்தில் சமாதானக் கூட்டம் நடந்து வைகுண்ட ஏகாதசியில் சுவாமி தூக்கப்பட்டது. பாரம்பரியமாக சுவாமி தூக்கும் பணியை செய்துவரும் எங்களை சீர்பாதம் தாங்கிகளாக நியமனம் செய்ய உத்தரவிட வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !