கள்ளக்குறிச்சி சிவராத்திரி மகோற்சவம்!
ADDED :3926 days ago
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி சிவன் கோவில்களில் மகாசிவராத்திரி மகோற்சவம் 17ம்தேதி நடக்கிறது. கள்ளக்குறிச்சி சிதம்பரேஸ்வரர், ஏமப்பேர் விஸ்வநாதேஸ்வரர், தென்கீரனூர் அருணாச்சலேஸ்வரர், சின்னசேலம் கங்காபுரீஸ்வரர், தென்பொன்பரப்பி சொர்ணபுரீஸ்வரர், வடக்கனந்தல் உமாமகேஸ்வரர், நீலமங்களம் ஏகாம்பரேஸ்வரர், முடியனூர் அருணாசலேஸ்வரர், ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர், வரஞ்சரம் பசுபதீஸ்வரர் ஆகியகோவில்களில் மகாசிவராத்திரி மகோற்சவ அபிஷேக ஆராதனை வரும் 17ம் தேதி நடக்கிறது. 17ம் மாலை 6மணி முதல் 18ம் தேதி காலை 6 மணிக்குள் இரவில் நான்கு காலங்களாக பிரித்து சிறப்பு அபிஷேக அலங்காரமும் நான்குகால பூஜைகளும் நடக்கிறது.