வேதபுரீஸ்வரர் கோவிலில் ருத்ரபாராயண நிகழ்ச்சி
ADDED :3928 days ago
புதுச்சேரி: புதுச்சேரி பிராமணர் சங்கம் மற்றும் ஸ்ரீசாய் சங்கர பக்த சபா சார்பில், ருத்ரபாராயண நிகழ்ச்சி, இன்று நடக்கிறது. உலக நன்மைக்காகவும், காந்தி வீதியில் உள்ள, வேதபுரீஸ்வரர் கோவில் திருப்பணிகள் விரைவில் முடிந்து, கும்பாபிஷேகம் நடக்க வேண்டியும், இன்று (17ம் தேதி) ருத்ரபாராயண நிகழ்ச்சி நடக்கிறது.வேதபுரீஸ்வரர் கோவிலில், இரவு 7:00 மணி முதல் 8:30 வரை, குருகுல மாணவர்கள் நடத்தும் ருத்ரபாராயணத்தில், ருத்ரம் தெரிந்த அனைவரும் கலந்து கொள்ளலாம். மேலும் விபரங்களுக்கு, 98423 29770, 98423 27791 என்ற மொபைல்போன் எண்களில் தொடர்பு கொள்ளவும். இத்தகவலை ராஜா சாஸ்திரிகள் தெரிவித்துள்ளார்.