திண்டிவனம் அங்காளம்மன் கோவில் பிரம்மோற்சவ விழா!
ADDED :3991 days ago
திண்டிவனம்: திண்டிவனம் அங்காளம்மன் கோவில் பிரம்மோற்சவ விழா இன்று கொடியேற்றத்துடன் துவங்குகிறது. இன்று இரவு மகா சிவராத்திரி உற்சவமும், நாளை காலை 11.30 மணிக்கு, அங்காளபரமேஸ்வரி அம்மன் மகிஷாசூரனை வதம் செய்த கோலத்தில் ஆதிபராசக்தியாக வீதியுலா வந்து அருள்பாலித்து மயானம் சென்று கொள்ளையிடும் நிகழ்ச்சியும் நடக்கிறது. விழா நாட்களில் கெஜலட்சுமி, அனந்த சயன கோலம், பராசக்தி, ரேணுகாம்பாள், ஈஸ்வரன் ஈஸ்வரி அலங்காரங்களில் வீதியுலா நடக்கிறது. 23 ம் தேதி அம்மன் முத்துரதத்தில் வந்து அருள்பாலிக்கிறார். ஏற்பாடுகளை விழா குழுவினர், கோவில் நிர்வாகிகள் செய்து வருகிறார்கள்.