உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மூங்கிலணை காமாட்சியம்மன் கோயில் விழா

மூங்கிலணை காமாட்சியம்மன் கோயில் விழா

தேவதானப்பட்டி : தேனி மாவட்டம் தேவதானப்பட்டியில் இருந்து 3 கி.மீ., தொலைவில் மஞ்சலாற்றங்கரையில் அமைந்துள்ளது மூங்கிலணை காமாட்சியம்மன் கோயில். ஜனவரி 26 ல் திருவிழாவிற்கான முகூர்த்தக்கால் நடப்பட்டது. மாசி மகாசிவராத்திரி திருவிழா இன்று துவங்குகிறது. தேவராட்டத்துடன் பள்ளயம் ஆலயம் வருதல் நிகழ்ச்சி, சிறப்பு பூஜைகள், ஆராதனை இரவு 7 மணிக்கு நடக்கிறது. தொடர்ந்து ஐந்து நாட்கள் இந்த நிகழ்ச்சிகள் நடக்கிறது.மதுரை, திண்டுக்கல், தேனி மாவட்டங்களைச் சேர்ந்த பல ஆயிரக்கனக்கான பக்தர்கள் விழாவில் பங்கேற்பர் என்பதால் டி.எஸ்.பி. உமாமகேஸ்வரன் தலைமையில் 300 மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தேவதானப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் மருத்துவ அலுவலர்கள், தீயணைப்பு வீரர்கள், மின்வாரிய அலுவலர்கள் 24 மணிநேரமும் பணியில் இருக்க உத்தரவிடப்பட்டுள்ளது. வத்தலக்குண்டு, பெரியகுளத்திலிருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. பரம்பரை அறங்காவலர் தனராஜ்பாண்டியன், பரம்பரரை நிர்வாக அறங்காவலர் கனகராஜ்பாண்டியன், செயல் அலுவலர் ராஜா ஆகியோர் ஏற்பாடுகளை செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !