பகவதி அம்மன் கோயிலில் குங்கும அர்ச்சனை
ADDED :3998 days ago
பனைக்குளம் : பனைக்குளம் அருகே உள்ள அத்தியூத்து பகவதி அம்மன் கோயிலில் உலக நன்மைக்கான குங்கும அர்ச்சனை நடந்தது. முன்னதாக அம்மனுக்கு அபிஷேக, ஆராதனைகள் நிறைவேற்றப்பட்டு, மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். லலிதா சகஸ்ர நாமம், பஜனைகள் பாடப்பட்டன. மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. அழகன்குளம் அழகியநாயகி மகளிர்மன்ற பொறுப்பாளர் பிரேமா, தர்ம ரக்ஷண சமிதி நிர்வாகிகள் உள்பட பலர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை தலைவர் தர்மராஜ் செய்திருந்தார்.