சாமநாயக்கன் பாளையத்தில் 22ம் தேதி கும்பாபிஷேகம்!
பெ.நா.பாளையம் : பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள சாமநாயக்கன்பாளையத்தில், 85 ஆண்டுக்கு பிறகு வெள்ளி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் இம்மாதம், 22ம் தேதி நடக்கிறது.
கோவை மேட்டுப்பாளையம் ரோடு, வீரபாண்டி பிரிவில் இருந்து, நான்கு கி.மீ., தொலைவில் சாமநாயக்கன்பாளையத்தில், வெள்ளி விநாயகர் கோவில் உள்ளது. இக்கோவில் கும்பாபிஷேகம், 1930ம் ஆண்டு நடந்தது. 85 ஆண்டு கழித்து இம்மாதம், 22ம் தேதி கும்பாபிஷேகம் நடக்கிறது. விழாவையொட்டி, பழமையான கல்நிலைகள் சீரமைக்கப்பட்டுள்ளன.
புதியதாக முன் மண்டபம் கட்டப்பட்டு, கல்யாண சுப்பிரமணியர் கோவில், நவக்கிரக கோவில், அரசமர விநாயகர், கன்னிமூல கணபதி, மடப்பள்ளி புதிதாக நிர்மாணிக்கப்பட்டு, மதில்சுவர், கோபுரங்களுக்கு வர்ணம் பூசப்பட்டு திருப்பணிகள் நடந்துள்ளன. கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், நவகிரக ஹோமம், யாக கால பூஜைகள், மகாகும்பாபிஷேகம் ஆகியன நடக்கிறது. விழாவில், சொற்பொழிவு, ஜமாப், இன்னிசை, லட்சுமி நரசிங்கப் பெருமாள் திருக்கோவில் பஜனை குழுவினர் நாம சங்கீர்த்தனம், வாண வேடிக்கை, திருவிளக்கு வழிபாடு நடக்கிறது. ஏற்பாடுகளை சாமநாயக்கன்பாளையம் திருப்பணிக்குழு மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.