ஈஷா யோகா பயிற்சி வகுப்பு!
ADDED :3922 days ago
உடுமலை : ஈஷா யோகா பயிற்சி வகுப்பு, பெதப்பம்பட்டியில் வரும், 20ல் துவங்கி, 22ம் தேதி வரை, மூன்று நாட்கள் நடக்கிறது.
கோவை, பூண்டியில் உள்ள ஈஷா யோகா மையம் சார்பில், மன அழுத்தத்தில் இருந்து விடுதலை பெறவும், ஆரோக்கியமான உடல் நிலையை பேணவும், அமைதியான வாழ்க்கை முறையைஏற்படுத்திக்கொள்ளவும், எந்த ஒரு சூழ்நிலையையும் கவனமாக கையாளும் தன்மையை வளர்த்துக்கொள்ளவும் உதவும் யோகா பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது. இவ்வகுப்பு, உடுமலை அருகே பெதப்பம்பட்டி, சோமவாரப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வளாகத்தில் வரும், 20ம் தேதி முதல், 22ம் தேதி வரை நடக்கிறது. தினமும் மாலை, 6:00 முதல் இரவு, 8:00 மணி வரை, நடக்கும் இப்பயிற்சி வகுப்பில் சேர விரும்புவோர், 98655 53454, 98653 91921 என்ற மொபைல் எண்களில் தொடர்பு கொள்ளலாம்.