மகா சிவராத்திரி சொற்பொழிவு!
புதுச்சேரி: உழந்தைகீரப்பாளையம், புவன்கரே வீதியில் உள்ள சக்திவேல் பரமானந்த சுவாமி கோவிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி நடந்தது.
நேற்று காலை 9 மணிக்கு சிறப்பு அபிஷேகம், கூட்டு வழிபாடு நடந்தது. தொடந்து, நடந்த ஆன்மிக சொற்பொழிவு மற்றும் நுால் வெளியீட்டு விழாவில், ஆறுமுகம், புவனேஷ்வரன், ராதாகிருஷ்ணன் ஆகியோர் வரவேற்றனர். பழனியப்பன் தலைமை தாங்கினார். இந்திராகாந்தி அரசு கலை அறிவியல் கல்லுாரி முதல்வர் முனைவர் சிவ மாதவன், திருவாசகம் என்னும் தேன் என்ற தலைப்பில்சொற்பொழிவாற்றி, திருவாசகம்-திருக்கோவையார் என்ற நுாலை வெளியிட்டார். நுாலின் முதல் பிரதியை வில்லியனுார் திருவாசக் குழுவை சேர்ந்த கோமதி பெற்றுக் கொண்டார். தனமணி நுால் அறிமுக உரையாற்றினார். ஜெயமூர்த்தி நன்றி கூறினார். மாலை 4 மணி முதல் சிவராத்திரியையொட்டி, சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், கூட்டு வழிபாடும் நடந்தது. ஏற்பாடுகளை நால்வர் நற்றமிழ் மன்ற நிர்வாகக் குழு உறுப்பினர்கள் செய்திருந்தனர்.