உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அங்காள பரமேஸ்வரி கோவிலில் இன்று மயான கொள்ளை!

அங்காள பரமேஸ்வரி கோவிலில் இன்று மயான கொள்ளை!

மேல்நல்லாத்துார்: மேல்நல்லாத்துார் அங்காள பரமேஸ்வரி கோவிலில், இன்று, மயானக் கொள்ளை உற்சவம் நடைபெற உள்ளது.

கடம்பத்துார் ஒன்றியத்துக்குட்பட்ட, மேல்நல்லாத்துாரில் உள்ளது அங்காள பரமேஸ்வரி கோவில். இக்கோவிலின், 13ம் ஆண்டு, மயானக் கொள்ளை உற்சவம், இன்று நடைபெற உள்ளது.முன்னதாக, நேற்று முன்தினம், காலை 6:00 மணி முதல், 7:30 மணிக்குள் சிறப்பு அபிஷேகமும், பக்தர்கள் காப்பு கட்டுதல் நிகழ்ச்சியும் நடந்தன. அதன்பின், நேற்று காலை 8:00 மணிக்கு சிறப்பு அபிஷேகமும், இரவு 7:00 மணிக்கு பதி அலங்காரமும், சிறப்பு பூஜையும் நடந்தன. இன்று, காலை 6:00 மணிக்கு, மகா அபிஷேகத்திற்கு தீர்த்த குடம் எடுத்து வருதலும், 9:00 மணிக்கு, அங்காள பரமேஸ்வரிக்கு மகா அபிஷேகமும் நடைபெறும். பின், பக்தர்கள் வேல் குத்துதல் நிகழ்ச்சியும், அம்மன் வீதிஉலாவும் நடைபெறும். அதன்பின், மாலை 4:00 மணிக்கு மயானக் கொள்ளை உற்சவம் நடைபெறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !