சங்கராபுரம் பகுதியில் பிரதோஷ விழா!
ADDED :4012 days ago
சங்கராபுரம்: சங்கராபுரம் பகுதியில் பிரதோஷ விழா வெகு விமர்சையாக நடந்தது. சங்கராபுரம் அடுத்த தேவபாண்டலம் பாண்டுவனேஸ்வரர் கோவிலில் நடந்த பிரதோஷ விழாவிற்கு நாட்டார் ராமலிங்கம் தலைமை தாங்கினார். ரவி குருக்கள், கணபதி முன்னிலையில் பிரதோஷ நாயகருக்கு அபிஷேக ஆராதனைகள் நடந்தன. மகா தீபாராதனைக்கு பின் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. பாக்கம், கடுவனார், மஞ்சபுத்தூர், முதல் பாலமேடு, தியாகராஜபுரம் சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு நடந்தது.