உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மாசி அமாவாசை: ராமேஸ்வரம் கடலில் புனித நீராடிய பக்தர்கள்!

மாசி அமாவாசை: ராமேஸ்வரம் கடலில் புனித நீராடிய பக்தர்கள்!

ராமேஸ்வரம்: மாசி அமாவாசை யொட்டி, ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடி, சுவாமி தரிசனம் செய்தனர். ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் மாசி சிவராத்திரி விழா,கடந்த பிப்., 9 ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. 10 வது நாளான நேற்று மாசி அமாவாசையொட்டி, கோயிலில் இருந்து பர்வதவர்த்தினி மற்றும், பிரியா விடை அம்மன்களுடன் சுவாமி, தங்க ரிஷப வாகனத்தில் புறப்பாடாகி, அக்னி தீர்த்த கடற்கரையில் எழுந்தருளியதும், கோயில் குருக்கள் வேதமந்திரம் முழங்க, மகா தீபாராதனை நடந்தது. அங்கு திரண்டிருந்த பக்தர்களுக்கு தீர்த்த வாரி கொடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. அதன்பின், ஏராளமான பக்தர்கள் அக்னி தீர்த்த கடலிலும், கோயிலுக்குள் உள்ள 22 தீர்த்தங்களிலும் புனித நீராடி விட்டு, சுவாமி, அம்மன் சன்னதியில் நடந்த சிறப்பு பூஜையில் பங்கேற்றனர். ஏற்பாடுகளை கோயில் இணை கமிஷனர் செல்வராஜ் செய்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !