உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவாரூரில் மகா சிவராத்திரி நாட்டியாஞ்சலி விழா!

திருவாரூரில் மகா சிவராத்திரி நாட்டியாஞ்சலி விழா!

திருவாரூர் : திருவாரூர் தியாகராஜர் கோவில் வளாகத்தில் மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு நடந்த நாட்டியஞ்சலி விழாவில் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, திரு ப்பதி, மும்பை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த கலைஞர்களின் நாட் டிய நிகழ்ச்சி நடந்தது. திருவாரூர் தியாகராஜர் கோவிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு ஆண்டு தோறும் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி நடந்து வருகிறது. நேற்று முன் தினம் இரவு சிவராத்திரியை முன்னிட்டு மாலை 6.30 மணிக்கு துவங்கிய நிகழ்ச்சி அதிகா லை 2.50 மணி வரை நடந்தது. தொழிலதிபர் நந்தகோபால் முன்னிலை வகித் தார். கீதாபாலாஜி குத்து விளக்கேற்றி நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். அமெரிக்கா வித்யா, ஆஸ்திரேலியா தமயந்தி குழுவினர், சென்னை மேதா ஹரி மற்றும் டாக்டர் திவ்யபிரியா, அபிநயவர்ஷினி, புதுச்சேரி ரகுநாத் மேனட்கு ழுவினர்கள் மற்றும் சலங்கை கல்ச்சரல் அகாடமி, மும்பை முத்ரா டான்ஸ் அகாடமி மற்றும் லதா ராஜேஷ், பத்மினி, திருப்பதி சுரேஷ், சிதம் பரம் நட ரஜா நாட்டியாலா, பழனி உமா கலைக்கூட மாணவிகள், திருவாரூர் தில்லை நாட்டியாலயா கலைஞர் களின் நாட்டிய நிகழ்ச்சியும் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !