உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அங்காள பரமேஸ்வரி கோவில் மயானக்கொள்ளை உற்சவம்!

அங்காள பரமேஸ்வரி கோவில் மயானக்கொள்ளை உற்சவம்!

விருத்தாசலம்: விருத்தாசலம் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில், மயானக் கொள்ளை உற்சவத்தில் ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்தனர்.  விருத்தாசலம் சந்தைத்தோப்பு அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில், மகா சிவராத்திரி ரணகளிப்பு உற்சவம், கடந்த 13ம் தேதி துவங்கியது. நேற்று முன்தினம்  இரவு 8:00 மணிக்கு அம்மன் சுயரூபத்துடன் சென்று நிசானி வயிற்றைக் கிழித்து குடலைப் பிடுங்கி மாலையாக அணிந்து, குழந் தையை முறத்தில் ஏந்தி வரும் நிகழ்ச்சி நடந்தது. இரவு 12:00 மணிக்கு மேல் சக்தி அழைத்தல், அம்மன் சோதனை காட்சி நடந்தது. நேற்று அதிகாலை  அம்மன் ஈஸ்வர ரூபத்துடன் மணிமுக்தாற்றில் விருந்து கொல்லுதல் நிகழ்ச்சி, மாலை 4:00 மணியளவில் கோவிலிலிருந்து அம்மன் ஊர்வலமாகச்  சென்று, மணிமுக்தாற்றில் மயானக் கொள்ளை நிகழ்ச்சி நடந்தது. ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்தனர்.  இன்று (19ம் தேதி) அங்காள பர÷ மஸ்வரி, தாண்டவராய சுவாமி திருக்கல்யாணம், 21ம் தேதி தேரோட்டம், 22ம் தேதி செடல் உற்சவம், 23ம் தேதி திருவிளக்கு பூஜை நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !