திருவாரூர் சிவத்தலங்களில் சிவராத்திரி விசேஷ பூஜைகள்!
திருவாரூர்: திருவாரூர் மாவட்டத்தில் உள்ள சிவத்தலங்களில் மகாசிவராத்திரியை முன் னிட்டு விசேஷ பூஜைகள், அன்னதானம் மற்றும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. திருவாரூர் மாவட்டத்தில் நேற்று முன் தினம் நடந்த சிவராத்திரி விழாவில் தியாகராஜர் கோவில் கமலாயக்குளத்தின் நடுவில் உள்ள யோகம்பாள் உட னுறை நாகநாத சுவாமிக்கு சிறப்பு வழிபாடு மற்றும் நான்கு கால பூஜை கள் நடத்தி அன்னதானம் மற்றும் மரக்கன்றுகள் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை சிவராத்திரி மற்றும் பிரதோஷ குழுவின் பொறுப்பாளர் கள் சேகர்கலியபெருமாள், உதயகுமார் உள்ளிட்ட குழுவினர்கள் செய்திருந் தனர். கோவிலுக்கு செல்லும் வகையில் இரவு முழுவதும் படகு வசதி செய்ய ப்பட்டது. திருவாரூர் ஆயிரங்கால் மண்டபத்தில் தர்ம ரக்ஷன சமிதியின் சார்பில் சிவ நாம அர்ச்சனையும் தியாகராஜர், நடராஜருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. விளமல் மதுரை பாஷினி உடனு றை பதஞ் சலி மனோகரர் கோவிலில், நான்கு கால பூஜையை சிவாச்சாரியர் சக்தி சந்திரசேகர சுவாமிகள் நடத்தினார். அதன் பின் பதஞ்சலி மனோகர் வியாக்ர முனிவர்களுக்கு பாத தரிசனம் அருளிய காட்சி நடந்தது. அரசவனங்காடு ஆனந்த நாயகி சமேத கயிலாசநாதர் கோவிலில் மரகத லிங்கத்திற்கும், பின்னர் கண்ணாடியில் செய்யப்பட்ட 108 லிங்கத்திற்கும் பாலபிஷேகத்தை பக்தர்கள் செய்தனர். அலிவலம் காசி விசாலாட்சி சமேத காசி விஸ்வநாதர் மற்றும் காத்தாயி அம் மன், திருவாரூர் சன்னதி தெரு மங்களாம்பிகை சமேத திருநீலகண்டேஸ்வர், குடவாசல் அருகே திருச்சேரை ஞானாம்பிகை சமேத சாரபரமேஸ்வர் கோவி ல்களில் சிவராத்திரியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகங்கள் நடந்தது. கங்கா தர நல்லுார் வீரபத்திர காளியம்மன் கோவிலில் சுவாமி புறப்பட்டு திருச்சேரை சிவன் கோவிலுக்கு சென்று, ஞாம்பிகையிடம் வாள் பெற்று, அந்த வாளால் பக்தர்களுக்கு திருநீர் பூசும் காட்சி நடந்தது. ஈஷா யோக மையம் சார்பில் ஆரூரான் திருமண மண்டபத்தில் நடந்த ஈசனு டன் ஓர் இரவு என்ற சத்குரு வின் அருளுரை மற்றும் கேள்வி பதில் நேரடி ஒளி பரப்பு நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கனவர்கள் பங்கேற்று தியாகனங்கள் செய்தனர்.