உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நாகநாத சுவாமிக்கு வெள்ளி நாகாபரணம் அணிவிப்பு!

நாகநாத சுவாமிக்கு வெள்ளி நாகாபரணம் அணிவிப்பு!

காரைக்கால்: காரைக்கால் மேலகாசாகுடி நாகநாத சுவாமிக்கு ரூ.2.50லட்சம் மதிப்பில் வெள்ளி நாகாபரணம் அணிவிப்பு விழா நடந்தது. காரைக்கால் நெடுங்காடு மேலாசாகுடி அபீதகுஜாம்பாள் சமேத நாகநாத சுவாமி கோவிலில் புதிய வெள்ளி நாகாபரணம் அணிவிப்பு விழா மற்றும் மஹா சிவராத்திரி விழா சிறப்பாக நடந்தது.இக்கோவிலில் முன்னதாக மேல் யாகபூஜை செய்து பக்த பெருமக்கள் பொருளூதவியுடன் ரூ.2.50 லட்சம் மதிப்பில் செய்யப்பட்ட புதிய வெள்ளி நாகாபரணம் அணிவித்தல் மற்றும் அதை தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு சிவராத்திரி விழா மற்றும் நான்கு காலமும் அன்னதானமும் நடந்தது. இறையருளைப் பெறுவதற்கு பெரிதும் துணை நிற்பது தொண்டு,பக்தி என்ற தலைப்பில் புலவர் வைஜெயந்திராஜன் மற்றும் கவிஞர் ஆனந்தகிருஷ்ணன் ஆகியோர் சிறப்பாக செற்போழிவு ஆற்றினர். நிகழ்ச்சிக்கு ஏற்பாடுகளை மேலகாசாகுடி பிரதோஷ வழிபாட்டு மகளிர் மன்றம் சிறப்பாக செய்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !