உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவெண்ணெய்நல்லூர் அம்மன் கோவிலில் மகோற்சவம்

திருவெண்ணெய்நல்லூர் அம்மன் கோவிலில் மகோற்சவம்

திருவெண்ணெய்நல்லூர்: திருவெண்ணெய்நல்லூர் அருகே அம்மன் கோவிலில் கொடியேற்றத்துடன் மகோற்சவ விழா துவங்கியது. திருவெண்ணெய்நல்லூர் அடுத்த துலங்கம்பட்டு கிராமத்தில் புற்றுவடிவிலான அங்காளம்மன் கோவிலில் நேற்று முன் தினம் காலை 6:00 மணிக்கு காப்பு கட்டுதலுடன் மகோற்சவ விழா துவங்கியது. தினமும் சுவாமி வீதியுலாவும், 23ம்தேதி மயானக்கொள்ளை மற்றும் சக்தி கரக ஊர்வலம் நடக்கிறது. 24ம் தேதி மதியம் 12:00 மணிக்கு தேரோட்டமும், மறுநாள்(25ம்தேதி) மஞ்சள் நீராட்டு விழாவும் நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் உற்சவதாரர்கள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !