உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஒட்டப்பட்டி ஆனந்தாயிகோவிலில் தீ மிதி விழா!

ஒட்டப்பட்டி ஆனந்தாயிகோவிலில் தீ மிதி விழா!

இடைப்பாடி:இடைப்பாடி அருகே, ஒட்டப்பட்டியில் உள்ள ஆனந்தாயி அங்காளம்மன் கோவிலில் தீ மிதி விழாவும், மயானகொள்ளையும் நடந்தது.இடைப்பாடி அருகே உள்ள, ஒட்டப்பட்டியில் பிரசித்தி பெற்ற ஆனந்தாயி அங்காளம்மன் ஸ்வாமியின் மாசி மாத உற்சவம், கடந்த 5ம் தேதி தொடங்கியது. 15 நாட்களாக நடந்த திருவிழாவின் முக்கிய நிகழ்வாக, தீ மிதி விழா நேற்று அதிகாலை நடந்தது. பரமானந்தம் சுவாமிகள், தீ குண்டத்தில் இறங்கி தீமிதி விழாவினை தொடங்கி வைத்தார். பின்னர் மயான கொள்ளை நிகழ்ச்சி நடந்தது. ஆனந்தாயி அங்காளம்மன் ஸ்வாமியின் திருவீதி உலா நடந்தது. இடைப்பாடி, ஒட்டப்பட்டி, ஜலகண்டபுரம், நங்கவள்ளி, அம்மாப்பேட்டை, பவானி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து, ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !