உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராகவன்பேட்டையில் மயான கொள்ளை!

ராகவன்பேட்டையில் மயான கொள்ளை!

விழுப்புரம்: ராகவன்பேட்டையில் சிவசக்தி அங்காள பரமேஸ் வரி கோவிலில் மயான கொள்ளை விழா நடந்தது. இதையொட்டி  நேற்று முன்தினம்  காலை 6:00 மணிக்கு சந்தன காப்பு, 9:00 மணிக்கு குறத்தி குறிசொல்ல வீதியுலா செல்லும் நிகழ்ச்சி நடந்தது.  மதியம் 1:00 மணிக்கு அக்னி சட்டி எடுத்  தல், மாலை 3:00 மணிக்கு பெரியாயி, பாவாடை ராயன், சிவசக்தி அங்காளபரமேஸ்வரி, வீரபத்தின் வள்ளாளகண்டன் குறத்தி, காட்டேரி வேடங்கள்  அணிந்து மயான கொள்ளை நடந்தது.  வரும் 24ம் தேதி இரவு 7:00 மணிக்கு கும்பம் கொட்டுதல், 10:00 மணிக்கு கேளிக்கை நடக்கிறது.  ஏற்பாடுகளை அக்கிராம மக்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !