உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பெரியபட்டினத்தில் பாரிவேட்டை விழா!

பெரியபட்டினத்தில் பாரிவேட்டை விழா!

கீழக்கரை: பெரியபட்டினத்தில் உள்ள குதிரைமலையான் கருப்பணசுவாமி கோயிலில் பாரிவேட்டை விழா நடந்தது. சப்த கன்னிகளுக்கும், கருப்பணசுவாமிக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நிறைவேற்றப்பட்டன. கரகம், தீச்சட்டி எடுத்தும், பெண்கள் பொங்கலிட்டனர். நேர்த்திக்கடனாக ஆடு, கோழி இவற்றை பலியிட்டு படையலிட்டு பக்தர்கள் வழிபாடு செய்தனர். ஏற்பாடுகளை கோயில் டிரஸ்டி ஜீவானந்தம் தலைமையில் விழாக்குழுவினர் செய்திருந்தனர். பெரியபட்டினம் அழகுநாயகி அம்மன் கோயிலில் நேற்று பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !