மத்துரு கோட்டி அம்மன் கோவிலில் திருக்கல்யாணம்!
ADDED :3896 days ago
பொள்ளாச்சி: ஏரிப்பட்டி மத்துரு கோட்டி அம்மன் கோவிலில், மகா சிவராத்திரி விழாவையொட்டி திருக்கல்யாண உற்சவம் நேற்று நடந்தது. விழாவையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். பொள்ளாச்சி ஜோதிநகர் விசாலாட்சி உடமனர் ஜோதிலிங்கேஸ்வரர் கோவில், பொள்ளாச்சி சுப்ரமணிய சுவாமி கோவில் மற்றும் சுற்றுப்பகுதியைச் சேர்ந்த கோவில்களில் சிவராத்திரி பூஜை நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.