ரிஷப வாகனத்தில் அங்காள பரமேஸ்வரி அம்மன் வீதியுலா!
ADDED :3895 days ago
புதுச்சேரி: பிரம்மோற்சவ விழாவில், அங்காள பரமேஸ்வரி அம்மன், ரிஷப வாகனத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சின்ன சுப்புராயப்பிள்ளை வீதியில் உள்ள, அங்காள பரமேஸ்வரி கோவிலில் 38-வது பிரம்மோற்சவ விழா கடந்த 17ம் தேதியன்று துவங்கியது. விழாவில், மூன்றாம் நாளான நேற்று, ரிஷப வாகனத்தில் அம்மன் வீதியுலா நடந்தது. அறங்காவலர் குழு தலைவர் விஜயக்குமார், கோவில் நிர்வாக அதிகாரி ஜெனார்த்தனன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இன்று 20ம் தேதி முதல், அடுத்த மாதம் 3ம் தேதி வரை, தினமும் அம்மன் வீதியுலா வந்து அருள் பாலிக்கிறார். அடுத்த மாதம் 4ம் தேதி வேதபுரீஸ்வரர் கோவிலில் தெப்பல் உற்சவமும், 5ம் தேதி மாசி மக தீர்த்த வாரியும் நடக்கிறது.