காமாட்சி அம்மன் கோயில் விழா: கரும்பு தொட்டில் சுமந்த பக்தர்கள்!
தேவதானப்பட்டி : தேவதானப்பட்டி மூங்கிலணை காமாட்சி அம்மன் கோயில் மாகா சிவராத்திரி விழாவில் பக்தர்கள் அக்னி சட்டி எடுத்தும், கரும்பு தொட்டில் கட்டி குழந்தை சுமந்தும் தங்கள் நேர்த்திக் கடனை செலுத்தினர். தேவதானப்பட்டி மூங்கிலணை காமாட்சியம்மன் கோயில், மாசி மகா சிவராத்திரி திருவிழா கடந்த பிப்., 17 இரவில் துவங்கியது. மதுரை, திண்டுக்கல், தேனி மாவட்டங்களைச் சேர்ந்த பல ஆயிரம் பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்து வருகின்றனர். 3ம் நாளான நேற்று பொள்ளாச்சியைச் சேர்ந்த பக்தர் கரும்பு கட்டில் தொட்டில் கட்டி குழந்தையை சுமந்து சென்றார். சிவகாசியைச் சேர்ந்த பக்தர்கள் அக்னி சட்டி எடுத்தனர். தொடர்ந்து பல்வேறு பகுதி களில் இருந்தும், பக்தர்கள் அக்னி சட்டி, காவடி, கரும்பு தொட்டில் குழந்தை சுமந்தல் மூலம் தங்களின் நேர்த்திக்கடனை செலுத்தி வருகின்றனர். தண்ணீர், கழிப் பிடம் போன்ற வசதிகளை பரம்பரை அறங்காவலர் தனராஜ்பாண்டியன், பரம்பரை நிர்வாக அறங்காவலர் கனகராஜ்பாண்டியன், செயல் அலுவலர் ராஜா ஆகியோர் செய்து வருகின்றனர்.