காசியில் திருவாசக முற்றோதல் 1,900 சிவனடியார்கள் பங்கேற்பு!
ADDED :3941 days ago
திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றத்தில் இருந்து, சிவனடியார்கள் 1,900 பேர், திருவாசக முற்றோதல் செய்ய, தனி ரயிலில் காசிக்கு, நேற்று புறப்பட்டனர். திருக்கழுக்குன்றத்தில் உள்ள, சதாசிவ பரப்பிரம்ம சிவனடியார்கள் திருக்கூட்டத்தினர், ஒருங்கிணைந்து காசியில், திருவாசக முற்றோதல் செய்ய முடிவு செய்தனர். இதற்காக, சிவனடியார்கள் 1,900 பேர், நேற்று சென்னை சென்ட்ரலில் இருந்து, தனி ரயிலில் காசிக்கு புறப்பட்டனர்.