அங்காளம்மனுக்கு மஞ்சள் நீராட்டு விழா!
ADDED :3887 days ago
மூங்கில்துறைப்பட்டு: மூங்கில்துறைப்பட்டில் உள்ள அங்காளம்மனுக்கு மஞ்சள் நீராட்டு விழா நடந்தது. மூங்கில்துறைப்பட்டில் உள்ள அ ங்காளம்மன் கோவிலில் மயான கொள்ளை நிகழ்ச்சியைத் தொடர்ந்து மாலை அங்காளம்மன் வீதியுலா நடந்தது. நேற்று முன் தினம் இரவு 8 மணி யளவில் மஞ்சள் நீராட்டு விழா நடந்தது. அங்காளம்மன் குதிரை ரதத்தில் வீதியுலா செல்லும் போது பக்தர்கள் மஞ்சள் மற்றும் கலர் பவுடர் பூசி மகிழ்ந்தனர்.