மதுரை முக்தீஷ்வரர் கோயிலில் மாணவர்களுக்காக சிறப்பு யாகம்!
ADDED :3985 days ago
மதுரை: மதுரை தெப்பக்குளம் முக்தீஷ்வரர் கோயிலில் பொதுத் தேர்வை எழுதவுள்ள மாணவ, மாணவிகள் தேர்வில் நல்ல மார்க் எடுத்து, தேர்ச்சியடைவும், உயர் கல்விகளில் நல்ல வாய்ப்பு கிடைக்க வேண்டிசிறப்பு ஹோமம் நடைபெற்றது. இந்த யாகத்தில் மாணவர்கள் நலனுக்காக கணபதி ஹோமம், ஹயக்ரீவ ஹோமம், சரஸ்வதி பூஜை உட்பட பல்வேறு பூஜைகள் நடையபெற்றது. பின்னர் மாணவர்களுக்கு பூஜையில் வைக்கப்பட்ட பிரசாதங்கள் வழங்கப்பட்டது. இதில் ஏராளமான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.