பொதுத் தேர்வு எழுதும் மாணவர்கள் பெற்றோர்களுக்கு பாதபூஜை நிகழ்ச்சி!
திட்டக்குடி: திட்டக்குடி அடுத்த வெங்கனுõர் கோகுலம் உயர்நிலைப்பள்ளியில் பொதுத் தேர்வு எழுத உள்ள 10ம் வகுப்பு மாணவர்கள் பெற்றோர்களுக்கு பாதபூஜை செய்யும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு, பள்ளிக்குழுத் தலைவர் ரமேஷ் தலைமை தாங்கினார். செயலர் காசிராமன், பொரு ளாளர் பத்மநாபன், இயக்குனர்கள் சிவக்குமார், சங்கர், மனோகரன் முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமையாசிரியர் குமார் வரவேற்றார். முன்னதாக சிறப்பு விக்னேஸ்வர பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை நடந்தது. பூஜைகளை திட்டக்குடி திருஞானசம்பந்த குருக்கள் நடத்தி வைத்தார். தொடர்ந்து 10ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் 18 பேர் தங்கள் தாய், தந்தையருக்கு பாதபூஜை செய்யும் நிகழ்ச்சி நடந்தது. மாணவர்கள் பன்னீரால் பெற்றோர்களது கால்களைக் கழுவி, சந்தனம், குங்குமம் வைத்து, பூக்களால் அர்ச்சித்து வழிபட்டனர். தொடர்ந்து பெற்றோரின் காலில் விழுந்து வணங்கி ஆசி பெற்றனர். உதவி தலைமையாசிரியர் கவுரிப்பிரியா, ஆசிரியர்கள், பெற்றோர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.