நடுவீரப்பட்டு அங்காளம்மன் கோவிலில் தேர் திருவிழா!
ADDED :3889 days ago
நடுவீரப்பட்டு: நடுவீரப்பட்டு அங்காளம்மன் கோவிலில் 141வது ஆண்டு மாசி மாத மயானக் கொள்ளை விழாவில் தேர்திருவிழா நடந்தது. விழாவையொட்டி, கடந்த 15ம் தேதி மாலை 6:00 மணிக்கு கெடிலம் நதியிலிருந்து சக்தி கரகம் எடுத்து வந்து கொடியேற்றப்பட்டு விழா துவங்கியது. தொடர்ந்து 18ம் தேதி மாலை 3:00 மணிக்கு மயானகொள்ளை திருவிழா நடந்தது. 6:00 மணிக்கு திருத்தேரில் அங்காளம்மன் வீதியுலா நடந்தது. 19ம் தேதி காலை 8:00 மணிக்கு கூழ் ஊற்றுதல், மாலை 4:00 மணிக்கு மஞ்சள் நீராட்டு விழாவும் நடந்தது. ஏற்பாடுகளை பருவதராஜ குலத்தினர் செய்திருந்தனர்.