உளுந்தூர்பேட்டை அங்காளம்மன் மயானக் கொள்ளை திருவிழா!
உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை பாளையப்பட்டு தெருவிலுள்ள அங்காள பரமேஸ்வரி கோவிலில் மகா சிவராத்திரி-மயான கொள்ளை பி ரம்மோற்சவ விழா நடந்தது. இதையொட்டி கடந்த 12ம் தேதி கொடியேற்றி, காப்பு கட்டுதலுடன் விழா துவங்கியது. 17ம் தேதி இரவு சிறப்பு அலங்காரத்தில் அம்மன் கொலு வைத்தல், நள்ளிரவு மயானத்தில் அம்மன் உருகூட்டி Œக்தி அழைத்தல் நிகழ்ச்சி நடந்தது. கைலாசநாதர் குளக்கரையில் இருந்து பூங்கரகம் வீதியுலா புறப்பட்டு, அலகு போடுதல் நிகழ்ச்சி நடந்தது. பகல் 12 மணிக்கு 3 முகம் முக்கூட்டு கப்பரை ஊர்வலமும், மதியம் 3 மணிக்கு அம்மன் மயானம் புறப்படுதலும், வல்லாளராஜன் கோட்டை அழித்தல் நடந்தது. அங்கு மயானத்தில் பிரசாதம் படைத்தல், மயான கொள்ளைவிடுதல் நிகழ்ச்சியும் நடந்தது. நேற்று கொடி இறக்குதல், மஞ்சள் நீராட்டு, அம்மன் வீதியுலா நடந்தது. 22ம் தேதி இரவு 9 மணிக்கு ஸ்ரீபாவாடைராயன் சுவாமிக்கு கும்ப பூஜை படையல் போடுதல் நிகழ்ச்சி நடக்கிறது.