விருத்தகிரீஸ்வரர் கோவிலில் உழவாரப் பணி!
ADDED :3930 days ago
விருத்தாசலம்: விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் உழவாரப் பணி நடந்தது. விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் திருமுதுகுன்றம் பழமலைநாதர் உழவார திருக்கூட்டத் தலைவர் வெங்கடேசன் தலைமையில், 100க்கும் மேற்பட்டோர் நேற்று உழவாரப்பணியில் ஈடுபட்டனர். அதில், கோவில் பிரகாரங்கள், கோவில் வளாகத்தில் குவிந்திருந்த குப்பைகள், முட்புதர்கள் அகற்றப்பட்டன.