ராமகிருஷ்ணர் ஜெயந்தி விழா
ADDED :3930 days ago
புதூர்: மதுரை ரிசர்வ்லைன் ராமகிருஷ்ண மடத்தில் பகவான் ராமகிருஷ்ணரின் 180வது ஜெயந்தி விழா நடந்தது. சாரதா வித்யாலயா பள்ளி மாணவர்களின் ஊர்வலம் நடந்தது. பக்தி சொற்பொழிவில் மடத்தின் தலைவர் கமலாத்மானந்தர் பேசியதாவது: நமக்குள்ள கடமைகளை செய்ய வேண்டும். இறைவனை பெற்றோர், முதியோருக்கு மரியாதை அளிக்க வேண்டும். உங்கள் மனமும், செயலும் இறைவனை நாடியே இருக்க வேண்டும். அவரை அடைவதற்கு பக்தி, தியானம், பிரார்த்தனைகளில் ஈடுபட வேண்டும். இறைவன் ஒருவரே நிலையானவர் என்றார்.