விருத்தாசலம் கோவிலில் மாசி 2ம் வெள்ளி வழிபாடு!
ADDED :4240 days ago
விருத்தாசலம்: மாசி மாத இரண்டாம் வெள்ளியையொட்டி, விருத்தாசலம் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது. விருத்தாசலம் அடுத்த மணவாளநல்லுõர் சித்தி விநாயகர் உடனுறை கொளஞ்சியப்பர் சுவாமி கோவிலில் நேற்று காலை சுவாமிகளுக்கு பால், தயிர், சந்தனம், இளநீர், பன்னீர் போன்ற பொருட்களால் சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. மாலை 4:00 மணிக்கு கொளஞ்சியப்பர் சிறப்பு அலங்காரத்தில் மகா தீபாராதனை நடந்தது. அதேபோல், ஜங்ஷன்ரோடு ஜெகமுத்து மாரியம்மன், தென்கோட்டை வீதி மோகாம்பரி அம்மன் கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடந்தது. ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.