திருஷ்டி தோஷம் விலக!
ADDED :3877 days ago
நம: பன்னக நந்தாய
வைகுண்டவச வர்த்தினே
ச்ருதி சிந்து ஸுதோத்பாத மந்தராய
கருத்மதே
எட்டுவித நாகங்களை அணிகலன்களாக சூடிக் கொண்டிருக்கும் கருட பகவானே. நமஸ்காரம். பெருமாளின் திருவுள்ளத்துக்கும் ஆணைக்கும் கட்டுப்பட்டவரே. வேதங்களான பாற்கடலில் உள்ள அமுதசாரத்தை எடுப்பதில் சிறகுள்ள மந்தரமலை போல் இருப்பவரே. அழகான இறைக்கைகளும் சிறகுகளும் கொண்டவரே. தங்களை வணங்குகிறேன். இந்த ஸ்லோகத்தை தினமும் எட்டு முறை வீதம் சொல்லி வருவது சிறப்பு. சுவாதி நட்சத்திர தினங்களில் கருடனை தரிசித்து 12 முறை வலம் வந்து இந்தத் துதியை சொல்லி வழிபாட்டை ஆரம்பிப்பது பலனை விரைவில் தரும்.