உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அங்காளம்மன் கோவிலில் கொலுப்பு திருவிழா!

அங்காளம்மன் கோவிலில் கொலுப்பு திருவிழா!

அனுப்பம்பட்டு: அங்காளம்மன் கோவி லில், கொலுப்பு திருவிழா, வெகு விமரிசையாக நடந்தது. பொன்னேரி அடுத்த, அனுப்பம்பட்டு, ஊராட்சி  மன்ற அலுவலகம் அருகில் உள்ள அங்காளம்மன் கோவிலில், கொலுப்பு திருவிழா, நேற்றுமுன்தினம் துவங்கியது. அன்றைய தினம், நள்ளிரவு பதி கேட்டல் மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்தன. நேற்று, காலை 8:00 மணிக்கு, அங்காளம்மன் மற்றும் கங்கையம்மன் ஆகியோருக்கு புதிய திரிசூலம்  பதிக்கும் நிகழ்ச்சி நடந்தது.  அதை தொடர்ந்து, கங்கைநீர் திரட்டுதல், பொங்கல் வைத்தல் மற்றும் கும்பம் போடுதல் உள்ளிட்டவைகள் சிறப்பாக  நடைபெற்றன. மேற்கண்ட, இத்திருவிழா, 35 ஆண்டுகளுக்கு பிறகு, தற்போது நடைபெறுவதால், கிராமவாசிகள் திரளாக பங்கேற்று, அம்மனை  பக்தியுடன் வழிபட்டு சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !