உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மாணவர்களுக்கு காரணீஸ்வரர் கோவிலில் சிறப்பு வழிபாடு!

மாணவர்களுக்கு காரணீஸ்வரர் கோவிலில் சிறப்பு வழிபாடு!

சைதாப்பேட்டை: பிளஸ் 2, 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவ, மாணவியருக்காக, சைதாப்பேட்டை காரணீஸ்வரர் கோவிலில், சிறப்பு  வழிபாடு நேற்று நடைபெற்றது. அண்ணாமலையார் ஆன்மிக வழிபாட்டு குழு சார்பில், சைதாப்பேட்டை  காரணீஸ்வரர் கோவிலில், பிளஸ் 2, 10ம்  வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவ, மாணவியர் அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற வேண்டி, சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அதில்,  மாணவ, மாணவியர் அகல் விளக்கு ஏற்றி வேண்டி கொண்டனர். சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க, சிறப்பு வழிபாடு நடந்தது.   கடந் தாண்டு வழிபாட்டில் பங்கேற்று, அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவியர் பாராட்டப்பட்டனர். இந்த நிகழ்ச்சியில், கலைமாமணி டி.சஷிதர்,  நடிகர் இளவரசு கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !