உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மயில் வாகனனுக்கு மாசி பிரம்மோற்சவம்!

மயில் வாகனனுக்கு மாசி பிரம்மோற்சவம்!

ஆர்.கே.பேட்டை: சுப்ரமணிய சுவாமி கோவிலில், மாசி பிரம்மோற்சவம், நேற்று கணபதி பூஜையுடன் துவங்கியது. இன்று கொடியேற்றமும், வரும்  1ம் தேதி, தேர் திருவிழாவும் நடக்கிறது. அம்மையார்குப்பம், சுப்ரமணிய சுவாமி கோவிலில், மாசி மாத பிரம்மோற்சவம் நேற்று கணபதி பூஜையுடன்  துவங்கியது. இரவு, பெருச்சாளி வாகனத்தில் சுவாமி வீதியுலா எழுந்தருளினார். இன்று, காலை 9:00 மணிக்கு, கொடியேற்றமும், இரவு ஆட்டுக் கிடா  வாகனத்தில் உற்சவர் புறப்பாடும் நடக்கிறது. தொடர்ந்து, வரும் 4ம் தேதி வரை, தினசரி இரவு,  சிம்மம், நாகம், மயில், யானை, குதிரை என பல்வேறு  வாகனங்களில் உற்சவர் எழுந்தருளுகிறார். வரும் 1ம் தேதி, தேர் திருவிழா நடைபெறுகிறது.  கோவில் வளாகத்தில் தினசரி ஆன்மிக பட்டிமன்றம்,  சொற்பொழிவு நடத்தப்படுகிறது. தேர் திருவிழாவின் போது, புளியந்தோப்பில் பொது விருந்து நடைபெறும். வள்ளியை மணம் புரிந்த சுப்ரமணிய  சுவாமி, திருத்தணிகைக்கு செல்லும் வழியில், வள்ளியுடன் குப்பம் எனும் இந்த கிராமத்தில், தங்கியிருந்து சென்றதால், இந்த தலம் அம்மையார்குப் பம் என, வழங்கப்படுகிறது. இந்த கிராமத்தில் ஏராளமான மயில்கள், சுதந்திரமாக உலா வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !