விருத்தகிரீஸ்வரர் கோவிலில் சத்யசாய் சேவா உழவாரப் பணி!
ADDED :3928 days ago
விருத்தாசலம்: விருத்தகிரீஸ்வரர் கோவிலில், சத்யசாய் சேவா நிறுவனங்கள் சார்பில் உழவாரப் பணி நடந்தது. விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் ÷ காவில் மாசி மக பிரம்மோற்சவம், நாளை (23ம் தேதி) கொடியேற்றத்துடன் துவங்குகிறது. இதனை முன்னிட்டு, மாவட்ட சத்யசாய் சேவா நிறுவன ங்கள் சார்பில் கோவிலில் நேற்று உழவாரப் பணி நடந்தது. மாவட்டத் தலைவர் சாய் பிரசாத், சேவை ஒருங்கிணைப்பாளர்கள் ஏகாம்பரம், மீனாட்சி, கன்வீனர் குப்புசாமி மற்றும் நெல்லிக் குப்பம், கடலூர், சிதம் பரம் பகுதிகளைச் சேர்ந்த சத்ய சாய் நிறுவன அங்கத்தினர் பங்கேற்றனர். அதில், நுõற்றுக்கால் மண்டபம், உள்பிரகாரம், கல் மண்டபங்களில் ஒட்டடை அடிக்கப்பட்டு, பித்தளை சாமான்கள், குத்து விளக்கு, பூஜை பொருட்களை கழுவி, சுத்தம் செய்யப்பட்டன.